மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரிய கொடுந்துரையில் மின்சாரம் தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முசிறி தாலுகா வீரமணி பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் 25 வயதான பாலசுப்பிரமணி. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.நேற்று முசிறி தாலுகா பெரிய கொடுந்துறை அர்ஜுன தெரு காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் வேலை செய்துள்ளனர். வேலையை முடித்துவிட்டு நேற்று மாலை 6.30 மணி அளவில் கை, கால் கழுவுவதற்காக மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்து உள்ளார். அப்போது மின் ஒயரை பாலசுப்ரமணி கையில் எடுத்த போது எதிர்பாராதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று பாலசுப்பிரமணி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.