குமுளூர் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023- 24 ஆம் ஆண்டுக்குரிய முதலாம் ஆண்டு இளநிலை பிஏ தமிழ், பி ஏ ஆங்கிலம், வரலாறு, பிகாம், பி பி ஏ, பி எஸ் சி உயிரி தொழில்நுட்பம், இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய 10 பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான இணையதள முகவரி www.tngasa.in,nwww.tngasa.org ஆன்லைன் மூலம் 8 -5 -2023 முதல் 19- 5 -2023 வரை விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு இளநிலை பாடப்பிரிவுகள் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விவரம் அறிய விரும்போர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் 99655 04064, 94421 43441, 99409 15465 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்துக் கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வருகின்ற 23- 5 -2023 அன்று கல்லூரியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு படி மே 25 முதல் 29 வரை கவுன்சிலிங் நடைபெறும். பொது கவுன்சிலிங் மே 30 முதல் ஜூன் 9ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 12 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூன் 22 முதல் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்