பளூரில் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் அதிமுக மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் புதிய உறுப்பினர் சேர்த்தல், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பூத் கமிட்டி மகளிர் குழு, பாசறை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக புதிய உறுப்பினர் சேர்த்தல், பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பூத் கமிட்டி மகளிர் குழு, பாசறை குழு ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் அமைச்சருமான மு. பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒன்றி கழகச் செயலாளர்கள் ஜெயக்குமார்,ஆதாளி ஜெயராமன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் அம்மா பேரவை மாவட் செயலாளர் ரமேஷ் கல்பாளைம் ஊராட்சி மன்ற தலைவர் எம் ஆர்வி பாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.