பூக்கூடையில் மறைத்து மது விற்பனை செய்த பெண் கைது

0 571
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 5 திருச்சி மாவட்டம், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் இருக்கிறது. அக்கடைகளில் பூஜைக்கு தேவையான தேங்காய் பழம் பூமாலைகள் சுவாமி படங்கள் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சமயபுரம் சந்தை கேட் பகுதியை சேர்ந்த தேவி (40) இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பூ விற்பனை செய்து வந்த தேவி அரசு மது பாட்டிலை பூக்கூடையில் மறைத்து வைத்து விற்பனை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில், சந்தை கேட் பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் தேவி பூ கூடையில் 12 மது பாட்டிலை வைத்து விற்பனை செய்த தேவியை கையும் கழுவுமாக தனிப்படை காவல்துறையினர் பிடித்து தேவியை சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.