காகித ஆலையில் காப்பர் கம்பிகளை திருடியவர் கைது

0 907
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 7 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடிய வரை காவல்துறையினர் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஓந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மணிவேல் (24)இவர் மணப்பாறை அடுத்த மொண்டிபட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு 2 ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் நேற்று பணி செய்த மணிவேல் பிற்பகலில் ஆலைப் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ எடை கொண்ட காப்பர் பொருட்களை திருடி மதில் சுவருக்கு வெளியே வீசி உள்ளார் .அப்போது அங்கிருந்த பாதுகாவலர் மணிவேலை கையும் களவுமாக பிடித்து காகித ஆலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். அதனை தொடர்ந்து ஆலைப் போது காவல்துறையினர் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.