ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இணையதளம் மூலம் குழந்தைகளுக்கான ஆன்மீக வகுப்புகள் தொடக்கம்

0 798
Stalin trichy visit

தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும் இந்த சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆலோசனையின் பேரில், இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இணையவழியில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் தொடங்கப்பட்டது . முதல் நாளான இன்று ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கம் வந்த கதையை எளிய முறையில் ஸ்ரீரங்கம் கோயில் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் குறித்தும் வைணவ ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர்கள் புலவர் கிருஷ்ணா மற்றும் Dr ஜெயவித்யா ஆகியோர் குழந்தைகளுக்கு விளக்கினர் ,முதல் வகுப்பான இன்று தமிழ்நாடு , வெளி மாநிலம் , மற்றும் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளும் பக்தர்களும் கலந்து கொண்டனர் , ஆன்மிக வகுப்பை துவக்கி வைத்த இணை ஆணையர் மாரிமுத்து ஆன்மிக வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் 6.00 வரை நடைபெறும் என்றார். ஆன்மீக வகுப்பின் முதல் நாளான இன்று தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கலந்துகொண்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.