ஏ.ஐ.டி.யு.சி தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் பேரவை கூட்டம்

0 185
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 12  திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை. சிறு கடை வியாபாரிகளின் சங்க மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை கூட்டம் நேற்று  11.6.2023 ஞாயிறுமாலை 5 மணிக்கு சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் தரைக்கடை சங்க மாவட்டத் துணைத் தலைவர்  மேகராஜ் தலைமையில் நடைபெற்றது.

பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து தரை கடை சட்டங்களை எடுத்துரைத்து மாவட்ட பொருளாளர்  சையது அபுதாகீர் அவர்கள் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் சிவா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மணிகண்டம் ஒன்றிய கௌரவ தலைவராக முருகன் தலைவராக ஜெகநாதன் செயலாளராக மேகராஜ் பொருளாளராக ஜெயா துணைத் தலைவராக விஸ்வநாதன் துணைச் செயலாளராக சந்திரசேகர் ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் தோழர் . செல்வகுமார் அவர்கள் உரையாற்றினார். கூட்டத்தில் கட்டட சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் .முத்தழகு அவர்களும் பெண்கள் சங்க மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்  மருதாம்பாள் அவர்களும் தேசிய குழு உறுப்பினர் நிர்மலா,  ஒன்றிய துணைச் செயலாளர்,முத்துலெட்சுமி,  மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் ரஷியாபேகம், ஒன்றிய செயலாளர் வித்யா , உள்ளாட்சி சங்க மாவட்ட துணைத் தலைவர் நதியா, þ விமலா .þ, ஜெயபால் ,சரோஜா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரவை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

அந்தந்த பஞ்சாயத்து வாரியாக தரைக்கடை வியாபாரிகளை அரசு கணக்கெடுத்து அவர்களுக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும்.

இரட்டைவாய்க்கால் கோனார்சத்திரம் சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியில் நடைபெறும் வார சந்தையை அரசு மக்களுக்கு ஏதுவான இடம் தேர்வு செய்து தினசரி மார்க்கெட் டாகவியாபாரிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வசதி செய்து தர வேண்டும் .

வியாபாரம் செய்யக்கூடிய அந்தந்த இடத்தை அரசு பாதுகாத்து தர வேண்டும்.

தரைக்கடை வியாபாரிகளுக்கு மாதம் ரூபாய் 9000/= ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்ட முடிவில் புதிய தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.