காதல் திருமணம் செய்த பெண் மகனுடன் மாயம்
திருச்சி, ஜுன் 14 திருச்சி மேல சிந்தாமணி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.(36) இவரது மனைவி வள்ளி (32). இவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு நிதின் என்கிற 9 வயது மகன் உள்ளார். ஹரிகிருஷ்ணன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரத்தியடைந்த வள்ளி தனது மகன் நிதினுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சட்டநாதன் வழக்கு பதிந்து, மாயமான தாய் மகனை தேடி வருகின்றனர்.