திருச்சி மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து உயிரிழப்பு

0 325
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 14 தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று மத்திய சிறையில் செல்வராஜ் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.