ஓடும் பேருந்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது
திருச்சி, ஜுன் 14 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (23). இவர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் திருச்சிக்குச் செல்ல பேருந்தில் ஏறும்பொழுது குணசேகரனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை பிட்பாக்கெட் அடித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் சிவகங்கை மாவட்டம், ஆறாவயல், சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த கணேசன் (38) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து கணேசன் கைது செய்த போலீசார் அவரை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் சிறையில் அடைத்தனர். கைதான கணேசன் மணப்பாறை அருகே உள்ள ஆபீசர்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது