திருச்சி ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு
திருச்சி, ஜுன் 14 திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் புதிதாக ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை கட்டடத்தின் கட்டுமான பணியினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநர் வினீத், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், ஆவின் பொது மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.