கராத்தே மாஸ்டரிடம் ரூ. 6 லட்சம் மோசடி
திருச்சி, ஜுன் 14 திருச்சி கே.கே நகர், தங்கையா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டரான சங்கர். இவர் கராத்தே, சிலம்பம் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி சங்கரிடம் ஒரு இடத்தை காண்பித்தார். மேலும் அவர் சங்கரிடமிருந்து 6 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டார்.இதனையடுத்து சங்கர் தனியாக சென்று விசாரித்த போது சுரேஷுக்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமில்லை என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.