முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்: விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜுன் 15 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.