தீக்காயமடைந்த அரசு மருத்துவமனை ஊழியர்

0 276
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியர் கலையரசன் (27) என்பவர் தேவை இல்லாத பொருட்களை எரிக்க முற்பட்ட போது திடீரென உடலில் தீப்பிடித்து படுகாயம். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் எரிக்கப்பட்ட மாத்திரைகள் பெரோஸ் சல்பேட் மற்றும் போலிக் ஆசிட் மாத்திரைகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரைகள் சத்திற்காக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. காலாவதியாகும் தேதிக்கு முன்னரே மாத்திரைகள் ஏன் தீவைத்து எரிக்கப்பட்டது என மருத்துவத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.