திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
திருச்சி துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயில் ஆனித் திரு மஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திருவீதி உலா ஆனி மாதம் 11ஆம் தேதி 26/6/2023 திங்கட்கிழமை காலை 8 :30 மணி அளவில்
மஞ்சள் பொடி திரவிய பொடி பால் தயிர் இளநீர் பழவகைகள் சந்தனம் விபூதி ஆகிய 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் கலச அபிஷேகம் ருத்ர சமகம் மூல மந்திர ஜபம் வேத பாராயணம் முழங்க மற்றும் தேவாரம் திருவாசகம் நாதஸ்வர மேளம் சிவகண அடியார்கள் மேலத்துடனும் திரு நெடுங்களநாதர் திரு அருளால் நடைபெற உள்ளது அனைவரும் வருக திரு நெடுங்களநாதர் நடராஜர் அருள் பெறுக