சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

0 375
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.அம்மன் வெள்ளி காமதேனு வானத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்திருக்கோயிலில் ஏழு நிலைகளைக் கொண்ட கிழக்கு ராஜகோபுரம் பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷே விழா நடைபெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேகவிழா நடைப்பெற்று ஓராண்டு நிறைவானதால் நேற்றிரவு வருடாபிஷேக விழா நடைபெற்றது.இதை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைப்பெற்று மகா தீபாதரனை நடைபெற்றது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் தேரோடும் வீதிகளில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவில் ராஜகோபுரம் உபயதாரர்கள் பொன்னர், சங்கர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.