கல்லக்குடியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

0 340
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள சரஸ்வதி வித்யாலயம் மழலையர் பள்ளியில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

கல்லக்குடி அரிமா சங்கம், திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமை கல்லக்குடி பேரூராட்சி தலைவர் துரை என்கின்ற பால் துரை துவக்கி வைக்கிறார். காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஆண் பெண் இருபாலருக்கும் கண் புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் ,கிட்ட பார்வை, வெள்ளத்து போன்றவைகளுக்கு பரிசோதனை செய்யப்படும். முகாமுக்கு வருபவர்கள் முக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், ஆதார் கார்டு ,அடையாள அட்டை நகல் கொண்டு வரவும் ,சளி ,காய்ச்சல் உள்ளவர்கள் முகாமிற்கு வருவதை தவிர்க்கவும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.