ஆடி முதல் நாளில் பால்குடத் திருவிழா

0 334
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த‌மான்பூண்டி ஆற்றங்கரையில் நூற்றாண்டுகள் பழைமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறும். இந்நிலையில் ஆடி முதல் நாளான இன்று பால்குட விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காப்பு காட்டுதல் நடைபெற்றதை அடுத்து இன்று காலை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில் இருந் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பால்குடம் புறப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க குதிரை நடனத்துடன் பால்குடம் மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலை வந்து அடைந்த பின் மான்பூண்டி நல்லாண்டாவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த பால்குட விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.