பள்ளி மாணவர்கள் நடத்திய “உணவு திருவிழா” – மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்!
திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் “சத்துணவியல்” என்ற பெயரில் உணவு திருவிழா இன்று நடைபெற்றது.
இப்பள்ளியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 18 பேர் ஒன்றிணைந்து இந்த உணவு திருவிழாவை நடத்தினர்.
இதில், நவதானியங்கள் ,பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானிய உணவுகள், பழ வகைகள், காய் வகைகள், பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் உணவுத் திருவிழாவில் கண்காட்சியாக வைக்கப்பட்டன.
இந்த உணவு திருவிழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உணவுத் திருவிழா கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்..
.
இந்த உணவு திருவிழா கண்காட்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உணவு வகைகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் நிர்வாக தலைவர் ராகவன், ஆசிரியர்கள் சிவா, வெங்கடேசன், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..