400 மீட்டர் ஓட்டத்தில் திருச்சி தேசிய கல்லூரி மாணவி வெற்றி

0 250
Stalin trichy visit

திருச்சி, ஜூலை.18- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி 25-ந் தேதி வரை 17 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தடகளபிரிவில் திருச்சி தேசியக்கல்லூரி முதுநிலை ஆங்கிலம் முதலாமாண்டு மாணவி அக்ஷயாஸ்ரீ 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவி அக்ஷயாஸ்ரீ ஏற்கெனவே பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த தடகள வீராங்கனையாகதேர்வு செய்யப்பட்டு இருந்தார். மாணவிக்கு தேசிய கல்லூரி செயலாளர் ரகுநாதன், முதல்வர் குமார், துணை முதல்வர் பிரசன்னபாலாஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.