திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பின்னத்தூரில் சக்தி விநாயகர், எல்லையம்மன் என்ற ரேணுகா தேவி, மாகா மாரியம்மன், பத்ரகாளியம்மன், கருப்பசாமி, பகவதிஅம்மன், பூமாரியம்மன், முத்தாளம்மன், கழுவடியான் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாள் மண்டலாபிஷேக நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து பிறந்த ஊரை நோக்கி சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் பெண்கள் அனைவரும் சொந்த ஊரான பின்னத்தூருக்கு சீர்வரிசையோடு நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். அதன்படி நூற்றுக்கணக்கான பெண்கள் விதவிதமான பழங்களை தட்டில் வைத்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தலையை சுமந்தபடி கோவிலை நோக்கி சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின் அனைவரும் தங்கள் கொண்டு வந்த சீர்வரிசையாய் எடுத்து சென்றனர். முன்னதாக தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்ற போது பெண்கள் ஆடிப் பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போல் சிறுவர்கள் முதல் பெண்கள் வரை ஆட்டத்திற்கு பஞ்சம் இல்லை என்று சொல்லும் அளவில் விழா களை கட்டியது.