முதலமைச்சர் வருகை : ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி, ஜூலை 25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம்-2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைக்க வருகை தர உள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 26.07.2023 மற்றும் 27.07.2023 ஆகிய இரண்டு தினங்கள் பாதுகாப்பு காரணம் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே 26.07.2023 மற்றும் 27.07.2023 ஆகிய இரண்டு தினங்களில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிகன்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.