சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

0 281
Stalin trichy visit

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஜூலை 29  சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேர்வு செய்கிறார். 2023-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம்.

2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். எனவே திருச்சி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.