அனுமதியின்றி ஸ்பா நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது

0 424
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 29 திருச்சி கருமண்டபம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு (பொறுப்பு) காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினல் கருமண்டபம் சிங்கராயர் நகரில் செயல்பட்டு வரும் ஷைன் ஸ்பாவிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஸ்பா அனுமதி பெறாமல் செயல்படுவது தெரியவந்தது. அங்கு ஸ்பாவின் மேலாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லட்சுமிதேவி என்பவரும் மேலும் இரண்டு பெண்களும் இருந்தனர். இதையடுத்து இரண்டு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஸ்பாவின் மேலாளர் லட்சுமிதேவியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தில் ஸ்பாவின் உரிமையாளர் திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பதும் தெரியவந்தது.
இதையடுதது உரிய அனுமதியின் ஸ்பா நடத்திய உரிமையாளர் செந்தில்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களை பாராட்டி ஊக்குவித்து வரும் நிலையில், விஜய்மக்கள் இயக்கத்தினரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் இதுபோன்ற சமூகவிரோத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது  விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.