மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் நித்திலவல்லி. கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டில் வசித்துவரும் இவர் தினமும் மண்ணச்சநல்லூரில் உள்ள பள்ளிக்கு வந்து செல்வார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி இவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்தபோது இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பல மாதங்களுக்குப் பின்னர் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பதற்கு முன்பே மண்ணச்சநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.