திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வ.உ.சிதம்பரனாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 432
Stalin trichy visit

இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக புரட்சி செய்த வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வ.உ.சிதம்பரனாரின் சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வ.உ.சிதம்பரனாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் மேயர் சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.