சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீர்த்த வாரி

0 340
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீர்த்த வாரி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் மற்றும் ஆடிப்பெருக்கு நாளன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
விவசாயிகள் பயிரிட்டுள்ள சாகுபடி பயிர்களை நல்லபடியாக அறுவடை செய்ய வேண்டும் என்றும் தண்ணீர் குறையாமல் அறுவடை முழுமையாக நடைபெற வேண்டும் என வேண்டி ஆடிப்பெருக்கு அன்று காவிரி படித்துறையில் அம்மனுக்கு தீர்த்த வாரி நடைபெறுகிறது.
அந்த வகையில் ஆடிப்பெருக்கு நாளான இன்று அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
இன்று காலையில் அம்மன் புறப்பாடாகி
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் வலது புறம் அமைந்துள்ள முருகன் கோவில் அருகே உள்ள படித்துறையில் அம்மனுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது.

இந்த தீர்த்தவாரியில் மஞ்சள், அரிசி, மாவு, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட ஏழு மங்கள பொருட்கள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தலைமை குருக்கள் அருண், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.