குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஆக.9 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு இன்று நடைபெற்றது. இப்பேரணியை மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கி வைத்தார்… இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி தென்னூர் உழவர் சந்தையில் நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் சிறார் வன்முறை குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்…