ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

0 285
Stalin trichy visit

முசிறி அருகே முருகப்பெருமானுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

தா.பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பிரகாரத்தில் ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். 92 ஆம் ஆண்டாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செவந்தாம்பட்டி மதுரைவீரன் சுவாமி கோயிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம், காவடி ஆகியவற்றை முக்கிய வீதிகள் வழியாக சுமந்து வந்தனர். பின்னர் முருகப்பெருமானுக்கு பால், காவிரி தீர்த்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும்,
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நன்கு மழை பெய்யவும், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், குடும்ப நலன் மேம்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் நாதஸ்வர இசை கலைஞர்கள் நடத்திய மகோத்சவ இசை விழாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆடி கிருத்திகை விழா குழுவினர் செய்திருந்தனர்.
முசிறி,திருச்சி நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.