கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி : அமைச்சர்கள் ஆய்வு
சென்னை, அக்.9 கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் ரூ.1516.82 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.