காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்
தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம்-திரளான பக்தர்கள் வழிபாடு.
தா.பேட்டை சிவாலயத்தில் ஆடி கிருத்திகை விழா நிகழ்வின் தொடர்ச்சியாக நேற்று சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் ஆடி கிருத்திகை விழா நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை தொடர்ந்து நேற்று காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி,
ராஜ கணபதி, ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிரம்மா, விஷ்ணு, குரு பகவான், துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி,
பஞ்ச முக பைரவர், நந்தியம்பெருமான், உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், கூடுதலாக கோயில் பிரகாரத்தில் மதுரை மீனாட்சி, காளியம்மன், மாரியம்மன், முருகன், செட்டிங் அலங்காரமும் சிறப்புற செய்து வைக்கப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து விவசாயம் செழிக்கவும்,
உலக மக்கள் நன்மைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் மற்றும் பிரகார தெய்வங்களை வழிபட்டு வணங்கினர்.
தா.பேட்டை, முசிறி ,துறையூர், திருச்சி, நாமக்கல், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆடி கிருத்திகை விழா குழுவினர் செய்திருந்தனர்.