அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்
மணப்பாறை அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. 89 மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மிதிவண்டிகளை வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி வரவேற்றார். மணப்பாறை ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ், கண்ணுடையான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணிமுருகன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஊர் பட்டக்காரர் சிவச்சந்திரன், நாட்டாண்மைகள் மணிவேல், ஜெயக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் கார்த்திக்குமார், ஊராட்சி செயலாளர் சந்திரசேகர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.