கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க வேண்டுமென்றும், ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்றும், டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி பணி நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக 50 லட்சம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய டாஸ்மார்க் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy