கஞ்சா விற்பனை தொடர்பாக கொலை வழக்கு – 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy
திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அருண் குமார் என்பவரை கடந்த ஜூன் 10 ஆம் தேதி பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் உசேன் ஆகிய இருவரும், அருண்குமாரை தொலைபேசியில் அழைத்துள்ளனர். இவர்கள் பிரச்சனை செய்து வருவதாகவும், உடனடியாக இந்த இடத்திற்கு வரவேண்டும் என கூறுகிறார்கள் என தனது பாட்டியிடம் அருண்குமார் கூறி சென்றுள்ளார்.

இந்த நிலையில் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் அருண்குமாரை கொடூர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக பாட்டி சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இந்த வழக்கை புலன் விசாரணை செய்து ஜாகிர் உசேன் மற்றும் அருண் குமார் ஆகியோர் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக பகை இருந்துள்ளது. அதன் காரணமாக இருவரும் திட்டமிட்டு அருண்குமாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து ஜாகிர் உசேன் மற்றும் பிரேம் கண்ணன் ஆகிய 2 பேரை ஜூன் 11 ஆம் தேதி கைது செய்து குற்ற சம்பவத்தில் பயன்படுத்திய கொடூர ஆயுதங்களைப் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை, கொலைமிரட்டல், பொது மக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால் அவர்களுக்கு குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள ஏர்போர்ட் காவல் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதன்படி இருவரும் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டனர்.