பாஜக பிரமுகரை கண்டித்து தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 251
Stalin trichy visit

மணப்பாறையில் பாஜக பிரமுகரை கண்டித்து தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கருப்பூர் கிராமம், எஸ்.புதூர் பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கும் பா.ஜ.க., பிரமுகரை கண்டித்து தமிழர் தேசம் கட்சியினர் சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை விளக்கி முழக்கங்கள் எழுப்பினர். இதில் கட்சியின் மாநில அமைப்பாளர் குருமணிகண்டன், மணப்பாறை ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், ஒன்றிய தலைவர் குமார் என்ற கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் மருங்காபுரி முத்துக்குமார், வையம்பட்டி துரைராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் தேசம் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.