கார், டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில்
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் வந்தபோது டிராக்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்து – சம்பவ இடத்தில் கணவன், மனைவி பலி.படுகாயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. கல்லக்குடி போலீசார் விசாரணை.
திருச்சி மாநகர் கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் 83 வயதான கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி72 வயதான ஜெயலட்சுமி.அதேபோல் தீரன்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகரத்தினம் மனைவி 85 வயதான ஆண்டாள், மகன் 62 வயதான பாண்டியன், பாண்டியனின் மனைவி 56 வயதான காமாட்சி, ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்காக தீரன்நகரில் இருந்து கார் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு சென்று விட்டு திருச்சி நோக்கி காரில் வந்த போது, புள்ளம்பாடி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் எதிரே விறகு ஏற்றி வந்த டிராக்டர் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவி காமாட்சி, பாண்டியனின் தாய் ஆண்டாள் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்தில் உயிரிழந்த இரண்டு பேர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகவும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டிராக்டரை ஓட்டி வந்த புள்ளம்பாடி தேரோடும் வீதி பகுதியை சேர்ந்த ரவி என்பவரை கைது செய்து கல்லக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கார் விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.