பள்ளிக் கல்வித்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் தலைமையில் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளை உடனே செயல்படுத்துமாறு வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்களும், இணை இயக்குநர்களும மற்றும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும், வட்டாரக் கல்வி அலுவலர்களும், முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களும் கலந்துகொண்டார்கள்.