கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

0 343
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

லால்குடி அருகே ஜங்கமராஜபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் 70 வயதான சதாசிவம். இவர் நேற்று மதியம் அன்பில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.