இந்து சமய அறநிலைய துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை ஓய்வு பெற்றோர் சங்கம், திருச்சி மண்டலம்
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஓய்வு பெற்றோர் சங்க திருச்சி மண்டல கூட்டமும், துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த 40 உறுப்பினர்களுக்கு மரியாதை செய்து கௌரவப்படுத்தும் பணியும், மாநில செயற்குழுவும் இன்று 26.08.2023 திருச்சி ஹோட்டல் சங்கீதா கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் வயதால் மூத்த உறுப்பினர்கள் T.ராஜப்பா மற்றும் சுதந்திரம் ஆகியோர் ஆசிகளுடன் துவங்கிய விழாவில் 70 வயது நிரம்பிய 40 உறுப்பினர்கள் கோவில் மரியாதையுடன் சால்வை, மாலை அணிவித்து நினைவுப் பரிசும் அவரவர் உருவம் பொறித்து வழங்கி கொளரவப்படுத்தப்பட்டது. திருவேங்கடம் ஏற்புரை செய்து பிறப்பித்தார்.
விழாவின் துவக்கத்தில் திரு.மகாலிங்கம், தலைமை உரையும், இணை செயலாளர் G.சம்பத் குமார் வரவேற்புரையும், தொகுப்புரை திரு.பாரதியும், N.L.சீதரன்,மாநிலத்தலைவர் பொதுசெயலாளர் ஞானசம்பந்தம், மாநில பொருளாளர் கணேசன், அனைத்து துறை அரசு ஓய்வு ஊதிய சங்க மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் பத்மாசனி நன்றியுரை வழங்கினார்.
பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 29.03.2023ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில 5வது மாநாடு சிறப்பாக நடத்திய சென்னை மணடல உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே மாநாட்டு பொதுக்குழு தீர்மானங்கள் மற்றம் அனுப்பப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும் உடனடி பரிசீலித்து அறிவிப்பும் உத்தரவும் வழங்கிட வேண்டி ஆணையரை வேண்டி தீர்மாக்கப்பட்டது.
ஓய்வு பெற்றோர் சங்கத்திற்கென இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் அலுவலகத்தில் அலுவலக அறை ஒதுக்கீடு செய்திட வேண்டி தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளில் மற்ற மண்டலங்களின் செயற்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.