துறையூர் சின்ன ஏரியை சுத்தசெய்ய சமுக ஆர்வலர்கள் கோரிக்கை
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரியானது சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரி நீரானது இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது தற்போது நகரத்தில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக மனித கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் ஏரி நீரில் குப்பைகள் குவிய தொடங்கியது இதனால் ஏரி நீர் மாசு அடைந்ததோடு இப்பகுதி உள்ள நிலத்தடிநீரும் அமிலத்தன்மையாக மாறி உள்ளதாக சுகாதார துறையினர் கூறி வருகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட கழிவு நீரை சுத்த செய்திட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ஏரியை பாதுகாத்து பொதுமக்களின் சுகாதரத்தை பாதுகாத்திட
வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்