கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்
திருச்சி, ஆக.29 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரக பாலக்கரை பகுதி கழக பொதுக்கூட்டம் எடத்தெரு அண்ணா சிலை அருகில் நேற்று மாலை நடைபெற்றது
மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அடைக்கலராஜ் வரவேற்புரையாற்றினார். வட்ட செயலாளர் பி சி எடிங்டன் , பகுதிகழகச் செயலாளர் டி பி எஸ் எஸ் ராஜுமுகமது ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில்மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் , துணை மேயர் திவ்யா தனக்கோடி,
மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் மூக்கன்
லீலாவேலு, நூற்கான் சந்திரமோகன்,
பொன்செல்லையா, சரோஜினி, வெங்கட் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன்
ஏ எம் ஜி விஜயகுமார் ஆர் சி பாபு
பெஞ்சமின் நகர நெசவாளர் அணி அமைப்பாளர் மற்றும் கோவிந்தராஜ் வட்டக் கழக செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.