யாசகம் எடுத்ததாக 7 சிறுமிகள் மீட்பு: பெற்றோர் போராட்டம்

0 280
Stalin trichy visit

திருச்சி, ஆக.29  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே
நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பூக்கொல்லைப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன சிறுமிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்ததாக 7 சிறுமிகளை் குழந்தைகள் நல அமைப்பு குழுவினர் மீட்டுச் சென்றனர்.
திருச்சி மாவட்டத்தில் கைக்குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் முன்பு செய்திகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குழந்தைகளை வைத்து யாசகம் எடுப்பவர்களை குழந்தைகள் நல அமைப்பின் மூலம் மீட்க நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்,சமயபுரம்,நகர சிக்னல்கள் உள்ளிட்ட பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட குழுக்களை வைத்து போலீசார் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் 45 சிறுமிகள் தாயுடன் மீட்டு 3 வீடுகளில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில்
நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பூக்கொல்லை பகுதியில் 70 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வசிக்கும்
கவிதா(10), சரிதா(10), புவனேஸ்வரி(13), அனுசியா(12), பவித்ரா(12),அனுஷ்கா(13), தனலட்சுமி(13) 2 வயது குழந்தை ரிஷி ஆகிய 8 பேர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்ததாக கூறி குழந்தைகள் நல அமைப்பிலிருந்து மீட்டுச் சென்றனர்.இதில் 7 சிறுமிகள் பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

தங்கள் குழந்தைகள் பள்ளியில் படிப்பதாக போனோ பைடு சான்றிதழ் காட்டியும் குழந்தைகளை விடுவிக்க குழந்தைகள் நல அமைப்பு மறுத்ததால் ஆத்திரமடைந்த நரிக்குறவர் இன மக்கள் தற்கொலை செய்து கொள்வதாக மண்ணெண்ணை கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.