முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : திருச்சி எம்.பி. பாராட்டு

0 560
Stalin trichy visit

முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டத்திற்கு திருச்சி எம்.பி. பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம்,அந்த நல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இன்று (29.08.23) காலை 8.00 மணிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.திருநாவுக்கரசர்  மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி
ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் உண்டு மகிழ்ந்தார். உணவின் தரம் சுவை நன்றாக இருப்பதாக பாராட்டினார்.

இந்தியாவிலேயே கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கி அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்து இந்தியவரலாற்றில் சிறப்பான இடம் பிடித்த தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
மாணவர்களுக்குஉணவுபரிமாறியும்உணவு ஊட்டி விட்டும் மகிழ்த்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். பள்ளிக்கு 2 இலட்சம் செலவில் மாணவர்கள் அமர்ந்து படிக்க பெஞ்ச் டெஸ்க் வழங்குவதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.