போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு

0 318
Stalin trichy visit

முசிறியில் போட்டோ ஸ்டுடியோவில் திருட்டு.

முசிறியில் போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து கேமரா மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முசிறியில் துறையூர் ரோடு அருகே கந்தசாமி (43) என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் காலை கடை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த 6000 ரூபாய் பணம் கேமரா,கேமரா லென்ஸ்,கம்ப்யூட்டர் மதர் போர்டு உட்பட 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப் போயிருந்தது. இது குறித்து கந்தசாமி முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.