சுங்கச்சாவடி அருகே ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

0 361
Stalin trichy visit

வாடகை கட்டணத்தை அரசே உயர்த்த கோரி தமிழ்நாடு உன் உரிமை வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் வாகன வாடகை கட்டணத்தை அரசே உயர்த்த கோரியும் மற்றும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திம் தமிழ்நாடு உன் உரிமை வாகன ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உன் உரிமை உரிமை வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் செபஸ்டின் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிரிவாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,அனைத்து கனரக இலகுரக லோடு வாகனங்களின் வாடகையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்,ஆன்லைன் வழக்குப்போட்டு அதிகமாக வசூல் செய்வதையும்,

கர்நாடக மாநிலத்தில் அத்திப்பள்ளி ஆர்டிஓ வசூல் வேட்டை மற்றும் ஓஸ்கொட்டா மாலூர் வழிப்பறி உயிர் சேதம் குறித்தும்,

பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக வட்டி வசூல் செய்து வாகனங்களை பறிமுதல் செய்வது,

நலவாரியத்தில் ஓட்டுநர்கள் இணைவதற்கும் அதில் உள்ள பலன்களை உடனடியாக பெறுவதற்கும் ஆன்லைன் ஆப் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்த தரக் கோரியும்,

வெளி மாநிலங்கள் சென்று விபத்துக்குள்ளாகும் ஓட்டுநர் சொந்தங்களுடைய சடலங்கள் வீட்டிற்கு திரும்ப அனுப்புவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து தர கோரியும்,

இலகுரக வாகனத்திற்கும், கனரக வாகனத்திற்கும் அரசு நிர்ணயம் பெற்றுக் கொடுக்க வேண்டும், அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்,

மூன்று சக்கர ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் வாடகை குறித்தும்,

ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் ஒரு முறை பார்க்கிங் வசதி, குளியலறை, கழிவறைகள், தங்கும் வசதியோடு தமிழக அரசு எளிதாக பயன்படுத்தும் வண்ணமாக ஏற்பாடு செய்து தர வேண்டியும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்ர் நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.