விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

0 345
Stalin trichy visit

கல்லக்குடியில் இந்து முன்னனியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள அம்பாள் தியேட்டர் வளாகத்தில் இந்து முன்னனியினர் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வருகின்ற 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.இந்த விழாவை இந்தியா முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில்
திருச்சி புறநகர் இந்து முன்னனியின் புள்ளம்பாடி லால்குடி ஒன்றியம் சார்பில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சாமி சண்முகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனவேல் ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் பல்வேறு பொருப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.