தடகள போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

0 304
Stalin trichy visit

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற தடகள போட்டியில் வெற்றிப்பெற்று சாதனை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற தடகள போட்டியில் வெற்றிப்பெற்று சாதனை.சாதனை படைத்த பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

,
மண்ணச்சநல்லூரில் குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டி 30 பள்ளிகள் கலந்து கொண்டு 400 மாணவ மாணவிகள் போட்டியில் திறமையை வெளிப்படுத்தினர். இதில் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மண்ணச்சநல்லூர் குறு வட்டத்திற்கு ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகளும், நடைபெற்றது. போட்டிகளில் 30 குறு வட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் அனீஷ்ராஜ், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் சபரி என்ற மாணவனும் சாம்பியன்ஷிப் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்டபாணி மற்றும் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஆனந்த், ஆசிரியர் அனைவரும் பாராட்டினர். வெற்றி பெற காரணமாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் விமல் ராஜ் டேனியல் மணிமாறன் ஆகியோரை பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.