நெல் வயலில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கூட்டு ஆய்வு

0 337
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை கிராமத்தில் விவசாயி சின்னதுரை அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்துள்ள நெல் வயலில் விவசாயிகள் விஞ்ஞானிகள் நேரடி கூட்டு ஆய்வு செய்யப்பட்டது

இதில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் பேசுகையில் நெல் வயலில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும் திருந்திய நெல் சாகுபடி, கோனோ வீடர் கொண்டு களை எடுத்தல், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துதல் உயிர் உரங்கள் விதை நேர்த்தி, அங்கக சாகுபடி முறையில் நெல் சாகுபடி தொழில் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார்.குமுளூர் வேளாண்மை கல்வி நிலைய உதவி கல்வியாளர் டாக்டர் விஜய் வயல் ஆய்வு செய்து நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் அடையாளம் கண்டு விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கள ஆய்வு செய்து காண்பித்தார் மேலும் நெல் குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு போன்ற தீமை செய்யும் பூச்சிகள் அடையாளம் கண்டு முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் பயன்படுத்துதல், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துதல், வேம்பு பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல், பறவை தாங்கி அமைத்தல் நீர் மேலாண்மை செய்தல் பற்றி விவசாயிகளுக்கு கள ஆய்வு செய்து வருகை தந்து ஒருங்கிணைந்தபயிர் பாதுகாப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். மேலும் இந்த கூட்டு ஆய்வு கலந்து கொண்ட எசனைக் கோரை கிராமத்தைச் சார்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் திரு ராஜசேகரன் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் , அட்மா திட்ட உழவர் நண்பர் நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர் மேலும் இந்த வயல் ஆய்வின் போது திண்டுக்கல் காந்திகிராமிய பல்கலைக்கழக இளங்கலை வேளாண்மை மாணவர்கள்.வெங்கடேஷ், நவீன் சுந்தர், சக்தி பாலாஜி, . தானு மலைய பெருமாள் மற்றும் பொ. அழகு பாண்டியன் கலந்துகொண்டு கள ஆய்வு செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.