கஞ்சா புகைத்த 3 வாலிபர்கள் கைது
மணப்பாறை அருகே கஞ்சா புகைத்த 3 வாலிபர்கள் கைது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வளநாடுகைகாட்டியில் உள்ள காரணிக்குளம் பகுதியில் சின்னக்கோனார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 23), பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 24), இச்சடிப்பட்டியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (வயது 23) ஆகிய மூன்று பேரும் சிகரெடில் கஞ்சா வைத்து புகைத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வளநாடு போலீசார் மறைவான இடத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த மூவரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா, ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது. அல்லது கஞ்சா விற்பணை செய்பவர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.