கஞ்சா – லாட்டரி விற்ற 4 பேர் கைது

0 232
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி – நத்தம் நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய பாலம் அருகே அவ்வழியாக வந்த பெரம்பலூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த சுதாகர் (42), திருச்சி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (வயத 24), துவரங்குறிச்சி அருகே உள்ள பில்லுபட்டி காலனி தெருவை சேர்ந்த பிரபாகரன் (29), சிவகங்கை மாவட்டம், உரத்துப்பட்டி சேர்ந்த ஜெயசூர்யா (25) ஆகிய 4 பேரிடமும் சோதனை நடத்தியதில் அவர்களிடம் 3 கிராம் எடை கொண்ட கஞ்சா 2 பாக்கெட்கள், லாட்டரி எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள்,ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் 4 செல்போன்கள் இருந்தன. அவர்கள் அப்பகுதியில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த துவரங்குறிச்சி போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பாக்கெட், ரூ.10 ஆயிரம், செல்போன் களையும் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.